பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை திரைப்பட பாணியில் துரத்தி பிடித்த போலீசார்!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 12:36 pm
police-chased-the-bicycle-riders

சென்னையில் இருசக்கர வாகன பந்தையத்தில் ஈடுப்பட்டவர்களை துணை ஆணையர் அபினவ் மற்றும் போலீசார் திரைப்பட பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.  

சென்னை மெரினா கடற்கரை சாலையில் சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகன பந்தையம் நடைப்பெற்று வருகிறது. இந்த மோட்டார் சைக்கிள் பந்தையத்தில் பணம், அதிக விலைக் கொண்ட இருச்சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பந்தையம் வைத்து ரேஸில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  

இதனை தடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 29 இடங்களில் போக்குவரத்து துணை ஆணையர் ஶ்ரீ அபிநவ் மற்றும் திருவல்லிக்கேணி இணை ஆணையர் சுகுணவ் சிங் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டனர்.

இந்த சோதனையில் கடந்த 2 ஆம் தேதி வரை  இருசக்கர மோட்டார் வாகன பந்தையத்தில் ஈடுப்பட்டது, குடிபோதையில் வாகனம் ஒட்டியது, அதிவேகமாக வாகனம் ஒட்டியது, தலைகவசம் இல்லாமல் வாகனம் ஒட்டியது என இதுவரை 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 அட்டோ உள்பட மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அதேபோல், நேற்றும் துணை மற்றும் இணை ஆணையர்கள் தலைமையில் இரவு 10 மணி முதல் போலீசார் மெரினா கடற்கரை சாலையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அதிகவேகத்தில் வாகனம் ஒட்டி வந்து பின்னர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சி செய்தவர்களை போக்குவரத்து துணை ஆணையர் ஶ்ரீ அவினவ் தனது வாகனத்திலேயே துரத்தி சென்று பிடித்தார். 

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் என்ற காவலர் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை பிடிக்க முயலும் போது தவறி விழுந்து தோள் பட்டையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுவரை 13 பேரை காவல் துறையினர் துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close