மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 200 கிராம் தங்கம் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 10:03 am
gold-seized-in-trichy-airport

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6.லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஈரோட்டை சேர்ந்தஜெயபிரதா(39) என்பவர் தனது கைப்பையில் ரூ.6.33 லட்சம் மதிப்புடைய தங்க சங்கிலி, வளையல் என 200 கிராம் தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close