கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 01:36 pm
husband-killed-by-his-wife

மதுரையில் பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியே கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வந்தவர் பைனான்சியர் இளங்கோவன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (மே.31) ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவாகிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் முன் நின்ற இளங்கோவனை கத்தி, அரிவாள், போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்ற காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவரின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுக்ஷயா கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close