மனைவி மீது வைத்த தீ கணவன் மீதும் பற்றியதில் இருவர் உயிரிழப்பு..

  அனிதா   | Last Modified : 05 Jun, 2019 03:18 pm
couple-death-in-kodampakkam

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தம்பதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஷேர் கான் தோட்டத்தில் வசிப்பவர்கள் வடிவேலு (75), அமுதா (61) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மலேஷியாவில் பணியாற்றி வருகிறார். மகள் திருமணமாகி வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். வடிவேலு மற்றும் அமுதா தம்பதியினருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக இருவரும் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அண்டை வீட்டார் அவர்களை சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் அதேபோல் இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாததில் ஈடுபட்டுள்ளனர்.

சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த வடிவேலு தனது மனைவி அமுதா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார். அப்போது தவறுதலாக அவர் மீதும் தீப்பற்றிக் கொண்டதில் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, தம்பதியினரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

75% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close