ஆதரவற்ற மூதாட்டியை அரவணைத்த மாவட்ட ஆட்சியர்!

  அனிதா   | Last Modified : 05 Jun, 2019 05:23 pm
district-collector-care-an-unsupported-ancestor

ஆதரவின்றி சாலையில் உண்டு உறங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சென்று அரவணைத்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியரை கண்டு பொதுமக்கள் வியந்தனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சேலம் வீராணம் பள்ளிபட்டியை சேர்ந்த கமலம் என்கிற மூதாட்டி கடந்த சில ஆண்டுகளாக சாலையோரம் தங்கி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்புகின்ற பொழுது அந்த வயதான மூதாட்டி சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தார்.

இதை கண்ட மாவட்ட ஆட்சியர் காரை விட்டு இறங்கி அவரிடம் சென்று நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவிகளை வழங்கி அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அந்த மூதாட்டிக்கு தனது காரில் இருந்து குடிநீர் பாட்டில் ஒன்றை கொடுத்து அவரின் தாகத்தை தீர்த்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதாபிமான சேவையினை சாலையில் சென்ற அனைத்து பொதுமக்களும் வியப்புடனும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close