மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மகனை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 10:27 am
the-husband-committed-suicide-and-killing-his-son

கோவையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் தனது 13 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன். வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்த இவர், மனைவி அலமேலு மற்றும் மகன் யோகேஷ் (13) உடன் வசித்து வந்தார். அலமேலு குடும்ப தேவைக்காக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், அங்கு உடன் பணியாற்றிய நபருடன் நட்புடன் பழகியதாக கூறப்படுகிறது.

மேலும் அவ்வப்போது செல்போன் மூலம் அவர்கள் பேசிக் கொண்டதை கண்ட அர்ஜுனன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கணவன், மனைவி இடையே வாய் தகராறு முற்றியதும் அலமேலு வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

மாலையில் வீட்டிற்கு வந்தபோது கணவர் அர்ஜுனன் மற்றும் மகன் யோகேஷ் இருவரும் அங்கிருந்த மின்விசிறி மற்றும் தொட்டில் கட்ட அமைக்கப்பட்டிருந்த கம்பி ஆகியவற்றில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாகவே அர்ஜுனன் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மனைவி தனது பேச்சை கேட்காமல் தொடர்ந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால், மனமுடைந்த அர்ஜூனன், அலமேலுவுடன் மகன் யோகேசை விட்டுச் செல்ல மனமில்லாமல் சிறுவன் யோகேஷிற்கு தேனில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு,  அதன் பின்னர் சேலையை சிறுவனின் கழுத்தில் சுற்றி மின்விசிறியில் தொங்க விட்டுள்ளார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அலமேலுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close