மிதமான மழையில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 10:28 am
the-new-bridge-was-broken-in-moderate-rain

சேலம் மாவட்டத்தில் பெய்த மிதமான மழைக்கே புதிதாக போடப்பட்ட வெள்ளத்தடுப்பு பாலம் மற்றும் தார் சாலை அடித்து செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கொட்டச்சேடை அடுத்த ஏற்காடு செல்லும் பாதையில், மழைநீரை சேமிக்கும் வகையில் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர்  வாணியாறு நீர்த்தேக்கப் பகுதிக்கு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நீர்தேக்கப்பகுதி மற்றும் கால்வாய் இணையும் பகுதியில், வெள்ளத்தடுப்பு பாலம் மற்றும் தார் சாலையும் அமைக்கப்பட்டன. 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் புதிய பாலம் மற்றும் தார்சாலை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.. தற்போது மிதமான மழையே பெய்த நிலையில், இந்த மழைக்கே தடுப்பு பாலம் அடித்து செல்லப்பட்டது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், தரமற்ற முறையில் பாலம், சாலை அமைத்ததாலேயே சிறிய மழைக்கு கூட  தாங்காமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close