கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் கோழிக்கழிவுகள் பறிமுதல்!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 11:11 am
10-tonnes-of-chicken-waste-from-kerala-have-been-confiscated

கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் கோழிக்கழிவுகளை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். 

கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு தமிழக எல்லையான பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வருவாய்துறையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 டன் கோழிக்கழிவுகளை கைப்பற்றிய வருவாய்துறையினர், லாரி ஓட்டுநர் முகமது பாசீர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close