சங்கிலியால் கட்டி வைத்து சிகிச்சையளித்த போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 11:47 am
seal-for-drug-rehabilitation-center

திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் முறையான சிகிச்சை அளிக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

திருச்சி கே.கே.நகரில் உள்ள லைஃப் கேர் என்ற போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், காவலர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது,  சிகிச்சை பெற்று வந்த நபர்களின் கை, கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டு அவர்களுக்கு சிகிச்சையளித்தது தெரியவந்தது. 

இதையடுத்து, மருத்துவக்குழுவினர் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட மனநல மையம் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் லைஃப் கேர் மையத்திற்கு நேற்று சீல் வைத்தனர். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close