திருட்டுதனமாக மணல் அள்ளிய 5 பேர் கைது!

  அனிதா   | Last Modified : 07 Jun, 2019 12:38 pm
5-people-arrested-for-smuggling-sand

கும்பகோணம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் அனுமதியை மீறி வேன்களில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி செல்வதாக பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனையடுத்து, காவல்துறையினர் இன்று கொற்கை ஓடக்கரை பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அவ்வழியாக இரண்டு வேன்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ், நாதன்கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ், மூப்புக்கோவிலை சேர்ந்த மணிவண்ணன், ரெட்டிப்பாளையம் சேர்ந்த அருட்செல்வம், மாத்தி இளையராஜா ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close