கும்பகோணம் அருகே பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலத்தில், அவந்திபுரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பத்மாவதி. இவரது கணவர் முரளி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பத்மாவதி தனது மகளை டியூசனில் விடுவதற்காக நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 5 சவரன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களை திருடி சென்றுள்ளனர். வீடு திரும்பிய பத்மாவதி இச்சம்பவம் குறித்து கபிஸ்தலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் அனந்தபத்மநாபன் மற்றும் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
newstm.in