சென்னை: மனைவியுடன் செல்போன் கடைகளில் திருடிய  துணை நடிகர் கைது

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 07:19 pm
arrested-for-stealing-cell-phone-with-wife

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள  தனியார் செல்போன் கடையில் விலையுயர்ந்த 3 செல்போன்களை  இரண்டு பேர் திருடுவதை சிசிடிவி கேமரா மூலம் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்தக் கடை ஊழியர்கள், திருட்டில் ஈடுபட்ட துணை நடிகர் மற்றும் அவரது மனைவியை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆருண் என்ற தீபக் என்பதும், விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இவர் சின்னத்திரையில் துணை நடிகராகவும் இன்டீரியர் டெக்ரேட்டராகவும் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் பிரபலமான  செல்போன் கடைகளில் நுழைந்து செல்போன்களை வாங்குவது போல பாவனை செய்து விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளையடிக்கும் சிசிடிவி பதிவுகளும் ஏனைய கடைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தீபக் மற்றும் அவரது மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close