வங்கியில் பணம் எடுக்க சென்ற பெண் வீடு திரும்பவில்லை !

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 09:21 am
married-girl-missing

கும்பகோணத்தில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாச்சியார்கோயில் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவருக்கு கிருத்திகா(24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 27 ந் தேதி, நாச்சியார்கோயில் பகுதியிலுள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றவர், வீடு திரும்பவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமார் நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மயாமான கிருத்திகாவை தேடி வருகின்றனர். கிருத்திகா மாயமாகி 10 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close