நுரை பொங்க கழிவு நீர் கலந்து வரும் காவிரி குடிநீர்..

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 11:25 am
sewerage-mixed-in-cauvery-drinking-water

மணப்பாறை அருகே கறுப்பு நிறத்தில், நுரை பொங்க கழிவு நீராக மாறிய காவிரி குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், தண்ணீர் தேடி அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மணப்பாறை நகராட்சி பகுதியில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி பகுதியிலும் இதே நிலைதான் உள்ளது. தற்போது இப்பகுதி மக்கள் காவிரி குடிநீரை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றது. அந்த குடிநீரும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சமீப காலமாக விநியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி குடிநீர் முற்றிலும் கறுப்பு நிறத்தில் கழிவு நீரை விட மோசமான நிலையில் நுரை பொங்க வருகிறது. இதை கண்டு வேதனையடைந்துள்ள மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல், காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close