சிறைக்கைதி வலிப்பு நோயால் உயிரிழப்பு!

  அனிதா   | Last Modified : 08 Jun, 2019 11:39 am
prisoner-s-death-by-epilepsy

கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்தார். 

கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்தவர் கோழி சரவணன் (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் தகராறு செய்தது காரணமாக கடந்த 3ஆம் தேதி  கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்றிரவு சிறையில் வைத்து இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close