திருச்சி மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி மொழி கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனமான பிஎச்இஎல், துப்பாக்கி தொழிற்சாலை, விமான நிலையம், ரயில் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் என பல அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்புறம் உள்ள பெயர் பலகை மற்றும் கண்டோன்மென்ட் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் மர்ம நபர்கள் கருப்பு மையை கொண்டு அளித்துள்ளனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள ஹிந்தி எழுத்துகளில் கருப்பு மை பூசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை யார் அழித்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in