நெல்லை: பழைய பேப்பர் குடோனில் பற்றிய தீ,  80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 09:27 am
fire-accident-in-nellai

நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள பழைபேப்பர் குடோனில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பழைய பேப்பர், பண்டல் போடும் எந்திரம் உள்பட 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
 
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்பர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். இவருக்கு சொந்தமாக தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி- டவுண் சாலையில் பழை பேப்பர் குடோன் உள்ளது. இங்கு பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் தனியார் பேப்பர் மில் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில் குடோனில் திடிரென தீ பிடித்தது.  தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.  இதுகுறித்து உடனடியாக குடோன் உரிமையாளர் விஜயராஜன், பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டர். இந்த விபத்தில் பண்டல் எந்திரம் , டன் கணக்கிலான பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் , ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த விபத்து தொடர்பாக  வழக்கு பதிவு செய்துள்ள  தச்சநல்லூர் போலீசார்,  குடோன் அருகில் உள்ள வயல் பகுதியில் காய்ந்த சருகிற்கு வைக்கப்பட்ட தீ பரவியதா, அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close