கும்பகோணத்தில் அதிக வட்டி கொடுக்க முடியாமல், இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஐய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் 24 வயதான ஐயப்பன். இவர் தனது சொந்த செலவிற்காக சிவகுமார் என்பவரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்திற்கு, அதிக வட்டி கொடுக்குமாறு சிவகுமார் நெருக்கடி கொடுத்ததால் ஐயப்பன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் உள்ள ஐயப்பன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .
newstm.in