மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார்  திடீர் சோதனை

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 10:23 am
sudden-inspection-in-madurai-central-jail

மதுரை மத்திய சிறைச்சாலையில்  மீறி சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட சொகுசு பொருட்கள் பயன்பாட்டில் உள்ளாதா என்பது  குறித்து 100க்கும் மேற்பட்ட போலீசார்  திடீர் சோதனையில் ஈடுபட்டனர்

மதுரை மத்திய சிறைச்சாலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக  தடை செய்யப்பட்ட  , புகையிலை, சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட சொகுசு பொருட்கள்  பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து மதுரை மத்திய சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் மதுரை திலகர்திடல் உதவி ஆணையர் வெற்றி செல்வன் தலைமையிலான‌ 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இன்று காலை 5.45 மணி முதல் 7.05 மணி வரை மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகள் உட்பட 1300க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள், உணவு தயாரிக்கும் பகுதிகள், கைதிகள் மற்றும் சிறை அலுவலா்கள் பயன்படுத்தும் அறைகள் , கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில்  எந்த பொருட்களும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களை துன்புறுத்துவதாக கூறி மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள்  போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close