தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களை கொஞ்சிய இளைஞர்  கைது !

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 12:24 pm
madurai-youth-arrested-for-big-temple-problem

தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
      
தஞ்சாவூர் பெரிய கோயில் சிற்பங்களுடன் சல்லாபம் செய்வதை போல புகைப்படம் எடுத்து, இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் மதுரை ஒத்தகடையை சேர்ந்த முஜிபுர் ரகுமான், இந்த செயலில் ஈடுபட்டது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த முஜிபுர் ரகுமான் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து , முஜிபுர் ரகுமானை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close