ஜூன் 12ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 11:26 am
aiadmk-district-secretaries-meeting-on-june-12

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச்செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் வரும் 12ஆம் தேதி  நடைபெறுகிறது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், வரும் 12ஆம் தேதி  மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகளில் கிடைத்த வெற்றி, தோல்விகள் குறித்தும், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. 

பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளோருக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close