அதிமுக வலுவோடு உள்ளது: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 12:44 pm
aiadmk-is-stronger-minister-vellamandi-natarajan

திருச்சியில் ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். 

திருச்சி மாவட்டத்தில், ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளி கூடைபந்து மைதானம், ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள TVS டோல்கேட் ரவுண்டானா, ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குளிர்சாதன பேருந்து நிழற்குடை மற்றும்
ரூ.85 லட்சம் மதிப்பிட்டில் கட்டபட்ட பல்நோக்கு கட்டிடம் என மொத்தம் ரூ1.18 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  ஜியா உல் ஹக், மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருடைய நல்ல வழிகாட்டுதலின்படி தான் கழகத்தின் அத்தனை கோடி உறுப்பினர்களும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

வீர களத்தில் வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம், வெற்றி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும், தோல்வி பெற்ற நேரத்தில் ஒரு மாதிரியும் விமர்சனங்கள் சொல்வது சரியல்ல. ஆகவே மூத்த முன்னோடிகள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பெரும் தலைவர்கள் காட்டுகின்ற வழிகாட்டுதல் படிதான் கழகம் செயல்படும் என கூறினார். 

தேர்தலில் வெற்றி பெறும்போதும், தேர்வியை சந்திக்கும் போதும் இதுபோன்ற குரல்கள் ஒழிப்பது சகஜம். அதிமுக கழகம் வலுவோடும் பொலிவோடும் இருக்கிறது. தோல்வி கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம், மாபெரும் வெற்றியை மீண்டும் விரட்டுவோம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close