பல்வேறு ரக பலா பழக் கண்காட்சி!

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 03:52 pm
a-variety-of-jack-fruit-exhibitions

பலா தினத்தை முன்னிட்டு, திருச்சியில் நடைபெற்ற சிறப்பு கண்காட்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

பலாப் பழங்களின் சாகுபடியை பெருக்கவும், அதிலிருந்து பல்வேறு விதமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் திருச்சியில் பலாப் பழம் மற்றும் கன்றுகள் கண்காட்சி நடைபெற்றது.

இதில், பல்வேறு ரக பலா மரக்கன்றுகளும், பலாப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கோன், பலாப்பழ பவுடர், அதன் தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட தட்டு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு பலா ரகங்களை விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி சார்பில் பலா சாகுபடி மற்றும் அதன் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பலா வளர்ப்பு குறித்த ஆலோசனைகளை பெற்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close