உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு: ஜி.கே.வாசன்

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 05:17 pm
it-is-beauty-to-accept-the-true-condition-of-democracy-gk-vasan

ஜனநாயகத்தின் உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதுதான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ் மாநில காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் வரும் 16 -ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி பொய் கூறிதான் ஜெயித்தார் என ராகுல் காந்தி கூறி வருவது குறித்த கேள்விக்கு, "இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று அதிக இடங்களை வென்று தான் நரேந்திர மோடி ஆட்சி அமைத்துள்ளார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது" என கூறினார்.

மேலும், "தேர்தலில் மக்களின் குரலே மகேசன் குரல் என்போம். ஜனநாயகத்தின் உண்மை நிலையை ஏற்றுக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளுக்கு அழகு" என ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close