பீரை கடன் கேட்ட குடிமகன்...தரமறுத்தவருக்கு ரத்த காயம் பரிசு!

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 05:25 pm
customer-who-tried-to-hit-the-tasmac-employee-and-buy-beer

டாஸ்மாக் ஊழியரை தாக்கி மதுபாட்டிலை பறிக்க முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் சென்ட்ரல் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் செந்தில். இவர் இன்று மதியம் 12 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்துள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவர் பீர் ஒன்று கேட்டுள்ளார். இதையடுத்து விற்பனையாளர் பீர் பாட்டிலை கொடுக்கும்போது பணம் கேட்டதற்கு  கடனாக தரும்படி மேகநாதன் கூறியதாக தெரிகிறது. 

இதற்கு விற்பனையாளர் செந்தில் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மேகநாதன் அவரது கையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து செந்திலின் கையை கிழித்துள்ளார். இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த செந்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close