ரூ.1.20 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க மறுப்பதாக போலீஸார் மீது வழக்கு!

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 05:39 pm
rs-1-20-crore-fraud-police-refusing-to-take-action

சேலத்தில் ரூ.1.20 கோடி மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் மறுப்பதாக வெள்ளி வியாபாரி பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராவ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்  கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவக்குமாருக்கு வரவேண்டிய தொகை இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சீனிவாசன், கிருஷ்ணாராவ் இருவரும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து ஏமாற்றி வருவதாகவும், இதனால் தனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து உரிய நீதியை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் காவல் துறையினர் சிவக்குமாரின் புகாரை மேலோட்டமாக விசாரித்துவிட்டு அதுதொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து சிவகுமார் சேலம் நீதிமன்றத்தில், தன்னுடைய புகார் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவகுமாரின் புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டது .

ஆனால் அந்த உத்தரவையும் சேலம் காவல் துறையினர் இதுவரை மதிக்கவில்லை என கூறும் சிவக்குமார், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close