காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்.. பதறவைக்கும் வீடியோ காட்சி

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 10:33 am
cctv-footage-of-chennai-accident

சென்னையில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். 

சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு - மப்பேடு சாலையில் அதிவிரைவாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதி, முன்னால் சென்று கொண்டிருந்த 2 இருசக்கர வானங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், கிளாட்சன் (18), விக்ரம் (18), ஆறுமுகம் (40) அவரது மனைவி சாந்தி (35) ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.  

இதில் கிளாட்சன் என்ற மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுமுகம் மற்றும் சாந்தி இருவரும் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் ஒரு மாணவனாக இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இந்நிலையில், மற்றொரு சிசிடிவி காட்சியில் விபத்தை ஏற்படுத்தியவர் மதுபோதையில் காரை நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில், குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வரதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close