வயலில் மேய்ந்த மாடுகளுக்கு அரிவாள் வெட்டு

  அனிதா   | Last Modified : 09 Jun, 2019 07:11 pm
cut-the-sickled-for-the-cattle-in-the-field

திருச்சி, லால்குடி அருகே வயலில் மேய்ந்த பசு மாடுகளை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ரெட்மாங்குடி ஊராட்சியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சத்திய நாராயணசாமி (62). இவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டம் அருகே, அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் வயலும் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வயலில் வேலி அமைப்பது தொடர்பாக முத்துசாமிக்கும், நாராயணசாமிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சத்திய நாராயணசாமி சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சமரசம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 8) முத்துசாமியின் சோளப்பயிரில் நாராயணசாமியின் மாடுகள் மேய்ந்துள்ளதாக தெரிகிறது. 

இதைகண்டு ஆத்திரமடைந்த முத்துசாமி மூன்று பசுமாடுகளையும் தான் வைத்திருந்த அரிவாளால் வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் வெட்டியுள்ளார். இதுகுறித்து  சிறுகனூர் காவல்நிலையத்தில் நாராயணசாமியின் மனைவி ஸ்டெல்லாமேரி புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் போலீசார் நடவடிக்கை எடுத்த பிறகு தான் காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பேன் என ஸ்டெல்லா மேரி தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close