சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 10:46 am
the-family-members-have-attempted-suicide

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை திருவலிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயன்(30), புனித ராணி(29), சரண்யா(21) மற்றும் ஜெசினி(6) ஆகிய 4 பேரும் கடந்த 3 நாட்களாக தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு விடுதி அறையினுள் அவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

சிறிது நேரத்திற்கு பின் பணி நிமித்தமாக அந்த அறைக்குச் சென்ற விடுதி ஊழியர் ஒருவர், கதவை தட்டியும் திறக்காததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து அறையினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது 4 பேரும் விஷம் அருந்திய நிலையில் மயக்கமுற்று கிடப்பதை கண்டு பதறி மற்றவர்களுக்கு தகவல் அளித்தார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 6 வயது குழந்தை ஜெசினிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினர்  தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close