23 கிலோ கடத்தல் தங்கத்துடன் பிடிப்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல்!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 01:13 pm
international-kidnapped-gang-arrested

சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 23 கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கேமராக்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். 

சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகள் நான்கு பேர், ரூ.7.83 கோடி மதிப்புடைய 23 கிலோ தங்கம் மற்றும் ரூ.23 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட 'ட்ரோன்' எனப்படும் ரகசிய கேமரா பொறுத்தப்பட்ட குட்டி ஹெலிகாப்டர், வெளிநாட்டு கேராக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரையும், இந்த கடத்தலுக்கு உதவிய சுங்கத்துறை அதிகாரி ஒருவரையும் மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் கைது செய்து சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close