இருசக்கர வாகனத்தை ஸ்கெட்ச் போட்டு திருடி சென்ற இளைஞர்!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 02:12 pm
the-young-man-who-stole-the-bike

சென்னையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஸ்கெட்ச் போட்டு திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை சூளைமேடு லோகநாதன் தெருவில் வசிப்பவர் நீது. இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது  வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை காணாததால் அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ள வீட்டின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.

அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஆள்நடமாட்டம் இல்லாததை கவனித்து திட்டமிட்டு அவரது வாகனத்தை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து, நீது சி.சி.டி.வி காட்சிகளுடன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து வாகன திருடனை தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close