மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 04:24 pm
students-winning-state-level-competitions

மாநில அளவிலான இறகுப்பந்து மற்றும் நீச்சல் போட்டிகளில் பதக்கம் வென்ற திருச்சி விளையாட்டு விடுதி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு வாழ்த்து தெரிவித்தார். 

திருச்சிராப்பள்ளி விளையாட்டு விடுதியில் தங்கி பயின்றுவரும் மாணவர்கள்  மாநில அளவிலான இறகுப்பந்து மற்றும் நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். 

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்ஜூனியர் இறகுப்பந்து போட்டியில் மாணவன் லோகேஷ் தங்க வென்றார்.

அதேபோன்று ஜவஹர் மற்றும் சென்னையில் நடைபெற்ற வாட்டர்போலோ நீச்சல் போட்டியில் ஜஸ்வின் தங்கமும் பிரீத்தம் கவுல் வெள்ளி பதக்கமும் வென்றனர். சென்னையில் நடைபெற்ற ஜுனியர் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் அபிஷேக் தங்கமும் சர்வேஷ் வெள்ளி பதக்கமும் வென்றார்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ள வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று வாழ்த்து தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close