வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

  அனிதா   | Last Modified : 11 Jun, 2019 04:56 pm
a-young-girl-raped-by-a-gang

தேனி மாவட்டம் போடி அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளம் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். கணவர் அனுப்பிவிடும் பணத்தை எடுப்பதற்காக விஜயலட்சுமி அருகில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார். அப்போது இவரது மொபைல் எண்ணை வாங்கி வைத்துக்கொண்ட வங்கி ஊழியர் முத்து சிவகார்த்திகேயன் என்பவர் விஜயலட்சுமிக்கு போன் செய்து வேலை வாங்கித்  தருவதாக கூறியுள்ளார்.  

முதலில் மறுப்பு தெரிவித்த விஜயலட்சுமி, குடும்பச் சுமையை குறைப்பதற்காக வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். கம்பத்தில் தனக்கு தெரிந்த ஒருவரிடம் வேலைக்கு கேட்டு வைத்துள்ளதாக கூறி அவரை சிவகார்த்திகேயன் அழைத்துச் சென்றுள்ளார். கம்பத்தில் ஒரு விடுதி அறைக்கு கூட்டிச் சென்ற சிவகார்த்திகேயன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீடியோ எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். 

மேலும், அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதை வைத்துக் கொண்டு அவரது நண்பர்களும் இவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு, விஜயலட்சுமி உதவி கேட்டுச் சென்ற இருவரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது போன்று வங்கி மேலாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததையடுத்து மனமுடைந்த விஜயலட்சுமி, போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போடி தாலுகா ஆய்வாளர், புகாரில் தொடர்புடைய முத்துசிவகார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரன் என்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தப் புகார் தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close