காதல் ஜோடி தற்கொலை முயற்சி: பெண் உயிரிழப்பு

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 08:34 am
love-couple-suicide-attempt-female-death

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

சென்னை சவுகார்ப்பேட்டை பகுதியை சேர்ந்த சுமர் சிங், காஜல் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மதியம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் விடுதியின் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் அறையை திறந்து பார்த்தபோது, இருவரும் விஷம் அருந்திய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.  உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமர் சிங்கை அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காஜலும், சுமர் சிங்கும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் எதுவும்  கிடைக்கவில்லை என்பதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close