குடிக்க பணம் கொடுக்காத மனைவி: தீ வைத்து எரிக்க முயன்ற கணவன்!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 11:47 am
husband-who-tried-to-burn-his-wife

கோவையில் மது குடிக்க பணம் கொடுக்காததால் மனைவியை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சிட்கோ பிள்ளையார்புரம், கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (51). இவரது மனைவி சபர் நிஷா (39). இவர்களுக்கு 2 மகன், மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அப்துல் ரகுமான் டவுன்ஹால் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரம் செய்து வருகிறார். அப்துல் ரகுமான் வீட்டிற்கு வருமானத்தை தராமல் தினமும் குடித்து வந்துள்ளார்.

மேலும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த அப்துல் ரகுமான், சபர் நிஷாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இரவு 11.45 மணியளவில் வீட்டிற்கு வந்த அப்துல் ரகுமான், நிஷாவிடம் மீண்டும் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நிஷா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான் அவரை தாக்கியதோடு, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை நிஷா மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

நிஷாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் அப்துல் ரகுமானை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close