காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 12:53 pm
farmers-struggle-to-open-water-in-cauvery

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடகாவில் இருந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கவேண்டும். ஆனால் இதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  திருச்சி  காவிரி ஆற்றில் இறங்கி அரை நிர்வாணத்துடன் மணலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close