சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 04:16 pm
two-young-man-arrested-for-robbery

திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.  இவர் கடந்த 6ஆம் தேதி தனது மனைவி மீனா (36) உடன் எண்ணூர் கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மீனாவின் கழுத்தில் இருந்த 21 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர்.

இதனை சுதாரித்து கொண்ட மீனா கொள்ளையன் கையோடு சேர்த்து நகைகளை பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்கள் கணவன் மனைவி இருவரையும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே  தள்ளி விட்டு தப்பி சென்றனர். இதில் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, எண்ணூர் கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த டில்லி பாபு(22), பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த சூர்யா (20) என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வடக்கு கடற்கரை, தேனாம்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close