குடும்பத் தகராறு: ஓடும் காரில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட கொடுமை!

  அனிதா   | Last Modified : 12 Jun, 2019 05:48 pm
murder-attempt-in-coimbatore

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக ஓடும் காரில் இருந்து பெண்ணை தள்ளி விட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.  2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நிலையில், சேர்ந்து வாழ நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கியதாக தெரிகிறது. இதனால், மும்பையில் பணியாற்றி வந்த ஆர்த்தி பணியில் இருந்து விலகி கோவை வந்துள்ளார்.  அருணும், ஆர்த்தியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

பின்பு, அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் கோவையில் இருந்து சென்னை செல்லலாம் என கூறி கணவர் ஆர்த்தி காரில் ஏற்றி சென்றுள்ளார். ஆனால், காரில் இருந்த அருணின் பெற்றோர் ஓடும் காரில் இருந்து அவரை வெளியே தள்ளிவிட்டுள்ளனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் காயமடைந்த ஆர்த்தி துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close