மத்தியகைலாஷ் சாலையில் மீண்டும் தோன்றிய திடீர் பள்ளம்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 10:49 am
a-sudden-crater-on-the-road

சென்னை மத்தியகைலாஷ் சிக்னல் அருகே உள்ள சாலையில் மீண்டும் திடீரென  பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய இடமாக உள்ளது. மத்திய கைலாஷ் சிக்னலை கடந்து தான் ஓஎம்ஆர், ஈசிஆர், ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கைலாஷ் சிக்னல் அருகே உள்ள சாலையின் நடுவில் நேற்றிரவு திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோன்றியது.

இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இரண்டே வாரங்களில் அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி இதே சாலையில் 8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close