திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் முற்றிலும் சேதம்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 11:06 am
2-houses-completely-damaged-in-a-fire-accident

விருத்தாசலம் அருகே மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டு கொட்டகை உட்பட 2 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த பள்ளிப்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் ராமர்.  இவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையின்,  மேல் செல்லும் மின் கம்பியில் ஏற்பட்ட உரசலால், மாட்டு கொட்டகை  தீப்பற்றி எரிந்தது.  இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால் காற்றின் வேகத்தால் அருகிலிருந்த தவ பழனி என்பவர் வீட்டுக்கும் தீ பரவியது. இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மள மளவென பற்றிய தீ அருகில் உள்ள ஞானசேகரன் வீட்டிலும் பற்றிகொண்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தீவிபத்தில் ஞானசேகர் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம், 2 பவுன் நகை, வெள்ளி பாத்திரங்கள், இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும், தவபழனி வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம், 6 பவுன் நகை, டீவி, பிரிட்ஜ், பீரோ, கட்டில் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடுகளையும், பொருட்களையும் இழந்து தவிக்கும் இக்குடும்பத்தினருக்கு உடனயாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close