ஒற்றை தலைமை அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 01:32 pm
not-necessary-to-single-head-minister-jayakumar

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது அவசியமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சாந்தோம் நெடுஞ்சாலையில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடல் பயிற்சி மையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  திறந்து வைத்தார். அப்போது, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் மற்றும் தென்சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு முறையான தகவல் கொடுத்துள்ளதாகவும், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சந்திப்பு சாதாரணமானது தான் என்றும் தெரிவித்தார். 

தலைமை செயலகம் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருதலை பட்சமாக போஸ்டர்கள் அடிக்க யாரும் கூறவில்லை எனவும், இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், வாக்குகள் அதிகரிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது என்றும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.  தமிழகத்தில் இனி வரும் சட்டமன்ற தேர்தலை பற்றி சிந்திக்க வேண்டும் என்பதால்தான் கட்சியின் கொள்கைக்கு உட்பட்டு கருத்துகள் கூற வேண்டாம் என சொல்லி இருந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close