பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 01:47 pm
chief-minister-has-started-various-welfare-schemes-in-tamil-nadu

சென்னை தலைமைச் செயலகத்தில் 6 துறைகளுக்குட்பட்ட பல்வேறு நல திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

தமிழக உள்துறை சார்பில்  கோவை, பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ரூ.4கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவல்நிலையங்கள், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், தேவக்கோட்டையில் தீயணைப்புத்துறை ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் புழல் சிறையில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள பெட்ரோல் நிலையம் ஆகியவற்றினை  முதலமைச்சர்  திறந்து வைத்தார்.  மேலும் 2018 ஆம் ஆண்டிற்கான காவல்துறையினரின் ஆண்டு மலரை முதல்வர் வெளியிட்டார்.

இதேபோல், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.84 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் ரூ.12 கோடி செலவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டையை முதல்வர் வழங்கினார்.  

சுற்றுலாத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா, மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மற்றும் திருநெல்வேலி முன்னாள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பசுமை விருதுகளை முதல்வர் வழங்கினார். பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்துவைத்த முதலமைச்சர் சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பெஞ்சமின், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, துரைக்கண்ணு, வளர்மதி, எம்.சி.சம்பத், கருப்பண்ணன், மாஃபா.பாண்டியராஜன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், மற்றும் துறைசார்ந்த செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close