திரைப்பட தயாரிப்பாளரின் சகோதரி வீட்டில் நகைகள் திருட்டு!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 03:11 pm
jewelry-stolen-at-the-producer-sister-s-home

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சகோதரி வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி கணேஷின் சகோதரி மகாலட்சுமி சென்னை அபிராமபுரம்  டாக்டர்.ரங்கா சாலையில் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புடைய தங்கம், வைர நகைகள் மற்றும் பணம்  திருடு போனதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த புகாரில், தனது வீட்டில் 5 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் வீட்டு பணிப்பெண் சுதா கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக முழுநேர பணி செய்து வீட்டிலேயே தங்கி வந்தார்.

அவ்வப்போது, வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் நகைகளை திருடி, வாரம் தோறும் தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு போய் கணவரிடம் கொடுத்து நகை கடையில் விற்றிருப்பதாக குறிப்பிட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் கோரியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close