ஆங்கில வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை.. ஆசிரியர் இல்லை என தமிழ்வழி கல்விக்கு மாற்றம்..

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 04:09 pm
english-medium-students-are-changed-to-tamil-medium

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டு, பின்னர் அதற்கான ஆசிரியர்கள் இல்லை என கூறி தமிழ்வழி கல்வி படிக்குமாறு பள்ளி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவிகள் பதினொன்றாம் வகுப்பையும் நம் பள்ளியிலேயே பயில வேண்டும், வேறு பள்ளிகளில் சேரக்கூடாது என தலைமை ஆசிரியர் சுமதி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் மாணவிகள் 25 பேர் ஆங்கில வழிக்கல்வியில் பயில்வதற்கு  11ஆம் வகுப்பு படிப்பதற்குச் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் நூல்களையும் வழங்கியுள்ளது. இதனிடையே, ஆங்கில வழி கல்வி நடத்துவதற்கு  தேவையான ஆசிரியர்கள் பணியில் இல்லாததால் மாணவிகள் தமிழ்வழிக் கல்வியை பயிலுமாறு தலைமை ஆசிரியர் சுமதி, அவர்களிடம் கூறியுள்ளார். 

இந்நிலையில்,ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற மாணவிகள் எப்படி தமிழ் வழி கல்வியில் பயில முடியும் என கூறி மாணவிகளின் பெற்றோர்கள்  இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் சுமதியிடம் கேட்ட போது, " நம் பள்ளியில் படித்த மாணவிகள் நல்ல முறையில் கல்வி கற்று பயன் பெற வேண்டும் என்பதற்காக தான் நான் ஆங்கில வழிக்கல்வியில் மாணவிகளை சேர்த்தேன். ஆனால் அதற்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் ஆங்கில வழி கல்வியை தொடர முடியவில்லை.

அதனால் தமிழ்வழிக்கல்வியில் அவர்கள் பயில வேண்டும் என்றும் ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர்கள் நியமித்த பிறகு மாற்றிக் கொள்வதாகவும் கூறினேன். ஆனால் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் முழுமையாக தமிழ்வழி கல்வியில் பயில சொல்கிறேன் என தவறாக புரிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close