கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 04:14 pm
two-man-arrested-for-robbery-with-knife

சென்னை நேப்பியர் பாலம் அருகே இளைஞர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து செல்போன் பறிக்க முயன்ற இரு கொள்ளயர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னை நேப்பியார் பாலம் அருகே நேற்று நள்ளிரவு கோட்டை காவல் நிலையத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ராயபுரத்தை சேர்ந்த தனிஷ் என்ற இளைஞரின் கழுத்தில் இரண்டு கொள்ளையர்கள் கத்தியை வைத்து மிரட்டி அவரின் மொபைல் போனை பறித்துக்கொண்டது மட்டுமின்றி மிரட்டவும் செய்துள்ளனர்.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, கொள்ளை நடப்பதைக் கண்டு கொள்ளையர்களை விரட்டிப் பிடித்து, அவர்களிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் போரூரைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பதும், அவர்கள் மதுபோதையில் மொபைல் பறிப்பதற்காக இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த புனித ஜார்ஜ் கோட்டை காவல்துறையினர் வேறு ஏதேனும் குற்ற சம்பவ வழக்குகள் அந்த இருவரின் மீதும் உள்ளனவா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close