காதல் ஜோடி உயிருக்கு ஆபத்து! கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!

  அனிதா   | Last Modified : 13 Jun, 2019 07:02 pm
love-couple-stayed-in-the-collector-office-for-protection

சேலத்தில் வீட்டை விட்டு வெளியேறி கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். 

சேலம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த கார்த்திகா என்பவருடன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். கார்த்திகா, மணிமாறன் இருவரும் முதலில் நண்பர்களாக பழகியுள்ளனர். பின்பு இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் அவருக்கு வேறு திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இதையடுத்து, கார்த்திகாவும் மணிமாறனும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் கெங்கவல்லி அருகே உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்வீட்டார் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இருவரும் பாதுகாப்பு கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இவர்களின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close