அதிமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2019 05:41 pm
car-glass-broken-following-robbery

நெல்லையில் அதிமுக பிரமுகர் ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்திருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை ஆலங்குளம் அடுத்த மருதபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் பாண்டியராஜன். அதிமுக பொதுக்குழு உறுப்பினரான இவர், இன்று காலை ஆலங்குளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வந்துள்ளார்.

டிரைவர் கனகதுரை உதவியுடன் ஆலங்குளத்தில் இரண்டு வங்கிகளில் தலா ரூபாய் 4 லட்சம் என மொத்தம் எட்டு லட்சம் ரூபாய் எடுத்து விட்டு அதனை காரில் வைத்துள்ளார். பின்னர் இருவரும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே காரை நிறுத்தி, கார் கண்ணாடியை ஏற்றி, லாக் செய்து விட்டு உள்ளே சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, கார் கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு பாண்டியராஜன் அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து ரூபாய் 8 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். புகாரின் பேரில் ஆலங்குளம் டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close