திருச்சி விமான நிலையத்தில் 763 கிராம் தங்கம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 11:58 am
gold-seized-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 763 கிராம் தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

கோலாலம்பூரரில்  இருந்து  திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஸ்பிகா ராணி என்ற பெண் பயணி தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 614.5 கிராம் (3 தங்க கட்டி 1 தங்க சங்கிலி) தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த மற்றொரு விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 5 லட்சம் மதிப்புள்ள 148.5 கிராம் எடையுள்ள 2 தங்க சங்கிலியையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதன் மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close