பொன்மலை பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 03:27 pm
railway-employees-strike-at-ponmalai-workshop

திருச்சி  ரெயில்வேயில் ஆட்குறைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட கோரி திருச்சி பொன்மலை பணிமனையில் ரயில்வே ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி பொன்மலை பணிமனையில் தேவையான உதிரி பாகங்களை வழங்காமல் ஒரு வண்டியில் உள்ள உதிரி பாகங்களை கழற்றி மற்றொரு வண்டியில் பொருத்தி இயக்குவது, 70 சதவீத இயந்திரங்கள் பழைய நிலையில் ஆயுட் காலம் முடிந்து இயக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு தொடர்பான இயந்திரங்கள் மற்றும் 38 கோடி மதிப்பிலான சிஎன்சி மெஷின்கள் மற்றும் பல்வேறு துறை பணிமனைகளில் இயக்கமின்றி முடங்கி கிடக்கின்றன. எனவே உரிய பாகங்கள் வழங்கினால்தான் பணியாற்றுவோம் என்று 4300 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 650 பெண் தொழிலாளர்கள் இணைந்து திருச்சி பொன்மலை பணிமனையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிகளில் ஈடுபடவோம் என்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close