சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்

  அனிதா   | Last Modified : 15 Jun, 2019 09:23 am
famous-rowdy-encounter-in-chennai

சென்னை மாதவரம் ரவுன்டானா அருகே பிரபல ரவுடி வல்லரசு காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வல்லரசு(20). இவர் மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ரவுடி வல்லரசுவை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜை ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரவுன்டானா அருகே வல்லரசு ஒரு நபரை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியுடன் சுற்றிதிரிவதாக தகவல் கொடுத்தார். 

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்  ரமேஷ் ஆகியோர் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வல்லரசு உதவி ஆய்வாளர் பவுன்ராஜை தலையில் வெட்டியுள்ளார். தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் வல்லரசுவை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

வல்லரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பவுன் ராஜும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close